(எப்.முபாரக்)
திருகோணமலை சூரியபுர பகுதியில் எட்டு வயது சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை(3) இரவு 8.00 மணியளவில் கைது செய்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். சூரிபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் குறித்த இளைஞர் இப்பிரதேசத்தில் உள்ள சிறுமிகளுக்கு பாடம் கற்பித்துக் கொடுத்து வரும் சந்தர்ப்பத்திலே சிறுமியை வல்லுறவுக்குட்படுத்த முயன்றதாக சிறுமி தாயிடம் கூறியதையடுத்து தாய் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்தே சந்தேக நபரை கைது செய்துள்ளதாக சூரியபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரை தடுத்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் இன்று வெள்ளிக்கிழமை(4) கந்தளாய் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் சூரியபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
