(எப்.முபாரக்)
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் மூன்று மாடுகளை (கால் நடைகளை) கந்தளாயிலிருந்து கிண்ணியாவுக்கு லொறியொன்றில் கொண்டு சென்ற இருவரை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அனுமதிப்பத்திரமின்றி மிருகங்களை துன்புறுத்தும் வகையில் லொறியொன்றில் இன்று சனிக்கிழமை(12) காலையில் கொண்டு சென்ற போது கந்தளாய் பொலிஸார் கைது செய்து சந்தேக நபர்கள் இருவரையும் கந்தளாய் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.சந்தேக நபர்கள் மாடுகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்திய லொறியும்,மூன்று மாடுகளும் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.