முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவுக்கு சத்திரசிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை பிரிவுக்கு அவர், நேற்றிரவு மாற்றப்பட்டுள்ளார்.
பம்பலப்பிட்டி கோடீஸ்வரர் வர்த்தகரான சியாம் மொஹமட் படுகொலைவழக்கில் ஆஜர்படுத்துவதற்க சிறைச்சாலையிலிருந்து கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு கடந்த திங்கட்கிழமை அழைத்து வரும்போது திடீர் சுகயீனமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.