(எப்.முபாரக்)
திருகோணமலை மூதூர், பிரதேசங்களில் அனுமதிப்பத்திரமின்றி கள்ளச்சாராயம் வைத்திருந்த குற்றத்திற்காக இருவருக்கு ஆறுமாத காலம் சிறை தண்டனை விதித்து நேற்று வியாழக்கிழமை(10) மூதூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தோப்பூர் வீரமா நகரைச் சேர்ந்த ஒருவருக்கு மூவாயிரத்து ஐந்நூறு ரூபாய் தண்டப்பணம் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஆறு மாதகால சிறைதண்டனையும் அதே போன்று பள்ளிக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மற்றொருவருக்கு எட்டாயிரம் ரூபாய் தண்டப்பணம் அதனைத் செலுத்த தவறும் பட்சத்தில் ஆறுமாத கால சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. புதன் கிழமை(9) இரவு மூதூர் மற்றும் சேருநுவர பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே மூதூர் நீதிமன்ற நீதிபதி ஐ.எம்.றிஸ்வான் தீர்ப்பளித்தார்.