GuidePedia

மீடியா என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்திருக்கும் ஒரு சேவையாகும். அவற்றின் ஆக்கங்கள், செய்திகள், எவருக்கும் அஞ்சாது உண்மையான, நேர்மையான கண்ணோட்டத்தில் பதியப்படல் வேண்டும் என்பதே மீடியா தர்மமமாகும்.
இந்த மீடியா தர்மத்தை மதிக்காது கோழைத்தனத்தை காட்டும் சுவைர் மீரானின், கயமைத்தனமான ஆக்கமொன்றை  கடந்த 07-09-2015 மடவளை நியுஸ் என்ற இணைய செய்தி  வெளியிட்டுள்ளது. 
அதன் தலைப்பு "ஜம்மியத்துல் உலமா மற்றும் முஸ்லிம் தலைமைகள் SLTJ வை கட்டுப்படுத்த வேண்டும்" :
By:சுவைர் மீரான்.

இந்தக் "கோழை மீரான்" வீர ஆக்கம்போல் வரைந்துள்ளதை, வெட்கமின்றி மடவளை நியூஸ் வெளியிட்டுள்ளது எமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, இந்தக் கிறுக்கன் தனது ஆக்கத்தைத் துவங்கும்போது பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
//அரச ஆதரவுடன் முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டப்பட்டு வந்த இனவாதத் தீ, ஜனநாயக வாக்குப் பலத்தின் மூலம் படிப்படியாக அணைக்கப்பட்டு பாராளுமன்றத் தேர்தலுடன் முற்றாக அணைக்கப்பட்டுவிட்டது என்று நிம்மதிப் பெருமூச்சு விட்ட வேளையில்.//
1) "இனவாதத் தீ" பாராளுமன்றத் தேர்தலுடன் முற்றாக அணைக்கப்பட்டுவிட்டது என்று நிம்மதிப் பெருமூச்சு....
இந்தப் பொய்யன் கூறுவது உண்மையென்றால், அனைக்கப்பட்ட "இனவாதத்-தீ" எப்படி அது மீண்டும் தலைதூக்கும்?
ஒரு மதம் அல்லது ஒரு அமைப்பு அந்த நாட்டு சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு, நாட்டின் விழுமியங்களைப் பாதுகாக்கும் விதத்திலும், சமூகத்துக்கு, இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் பேணும் எந்தவொரு நிகழ்ச்சியையும், பணிகளையும் செய்யும் உரிமை அவரவர்களுக்கு உண்டு. அதனை யாராலும் தடுக்கவோ, அல்லது தடை செய்யும் உரிமையோ கிடையாது.
இவ்வாறான நிகழ்சிகளை செய்யும் SLTJ அமைப்பாக இருக்கலாம் அல்லது வேறு எந்த அமைப்பாகவும் இருக்கலாம். அதனை தட்டிக் கொடுத்து ஆதரிக்கவேண்டுமே அல்லாமல், முட்டாள்தனமாக அவமதித்து மறுப்புப் பதிவிடுவது கோழைத்தனமாகும். 
இந்த நிகழ்ச்சியை நடாத்த SLTJ என்ற அமைப்பு,
> போலிஸ் அனுமதி பெற்றுள்ளது.
> எந்தவொரு பௌத்த விகாரைக்கோ அல்லது பௌத்தர்களின், மாற்று மதத்தார்களின் வீட்டிற்கோ சென்று, அவர்களது SLTJ நிகழ்ச்சியைச்  செய்யாது தனியார் மண்டபத்தைப் பதிவு செய்து நடாத்தியுள்ளது.
> எந்தவொரு மாற்றுமத சகோதரர்களையும் தனிநபரையும் பலவந்தமாக அழைக்காது திறந்த அழைப்பைச் செய்துள்ளது 
> விரும்பியவர்கள் மாத்திரமே பங்குபற்றியுள்ளனர்.
> யாரோடும் வீண் வம்புக்கோ, அடாவடிகளுக்கோ செல்லாது,  சட்டவிதிமுரைக்கு உட்பட்டு சுமுகமான, எப்போதும் செய்யும் வழமையான நிகழ்ச்சியையே செய்துள்ளது.
இந்தக் "கோழை மீரான்" அடுத்த உளறல்.
2) //ஹெம்மாதகமை என்னும் கிராமத்தில் SLTJ மேற்கொண்ட அவசியமற்ற ஒரு செயற்பாடு காரணமாக மீண்டும் கொழுந்துவிட ஆரம்பித்து விட்டது.//
எது அவசியமோ? அது "அனாவசியமாக" பார்க்கப்படும் இவ்வாறான எழுத்தாளனை முஸ்லிம் என்று அழைப்பதே முதலில் பிழையாகும்.
ஒரு முஸ்லிமுக்கு இருக்கும் பொறுப்பும் கடமையும் என்ன, என்பதை அறியாத, அண்ணலாரின் சீராவைக் கூட, சரியாக தெரியாத கோழை எழுத்தாளன் இந்த சுவைர் மீரான்.
ஓரிறைக் கொள்கையை ஒங்கியொலிக்க நபிமார்கள் அனுப்பப் பட்டார்கள். அதன் வரிசையில் இறுதியாக வந்த இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள்.
இறுதி இறைத்தூதரின் மறைவுக்குப் பிறகு, இவ்-அமாநிதத்தை, இந்தத் தூதை எத்திவைக்க, இஸ்லாத்தை ஏற்றுள்ள ஒவ்வொரு முஸ்லிமுக்கும் சுமத்தப்பட்ட தார்மீகப் பொறுப்பும் கடமையுமாகும்.
இலங்கை உள்ளிட்ட உலகளாவிய ரீதியில், மாற்று மதத்தாருக்கு மத்தியில், ஏன்? முஸ்லிம்களாலும் இஸ்லாம் தவறாகப் புரியப்பட்டு "இஸ்லாம்" பயங்கரவாதத்தை தூண்டும் மார்க்கம், பெண்ணடிமை, பலதாரமணம், நிகாப், இஸ்லாமிய குற்றவியல் தண்டனை (ஷரீஆ சட்டம்)   என்று ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களால் தூய இஸ்லாம் சேறுபூசப் பட்டுள்ளது. இதனால் இஸ்லாத்தின் சரியான தூதை எத்திவைக்க முடியாமல் தவிக்கின்ற இந்த வேலையில்.
இக்களங்கத்தைத் துடைக்கும் முதல் அடிப்படை அம்சமாகவே #இஸ்லாம்_ஓர்_இனிய_மார்க்கம் என்ற நிகழ்ச்சி தமிழ்நாடு தௌஹீது ஜமாத்தின் தலைவரும் அறிஞருமான சகோதரர் #பீ_ஜைனுல் ஆபிதீன் (PJ) அவர்கள் மூலம், நாடுபூராகவும், இந்தியாவில், மற்றும் அதன் இலங்கைகிளை SLTJ யின் மூலம், தூதுப்பணி மேற்கொள்ளப் பட்டு வந்ததில், இஸ்லாம், நடைமுறை சாத்தியமான, அறிவுப்பூர்வமான, சத்திய மார்க்கமாகும் என்று, ஆயிரக்கணக்கானோர், தூய இஸ்லாத்தை, அவர்களது வாழ்க்கை நெறியாகத் தேர்வு செய்தனர் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். அல்ஹம்துலில்லாஹ்.
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் இந்தியாவினுடைய ஒரு நிகழ்ச்சி.
அண்ணலாறது தூதை எத்திவைப்பது அனாவசியமான வேலை என்பவன் ஒரு முஸ்லிமாக இருக்க முடியுமா?
"இஸ்லாம்" உண்மையில் ஒரு இனிய மார்க்கமாகும். இந்த நிகழ்ச்சியில் இஸ்லாம் குறித்த, அதன் போதனைகள் குறித்த ஒவ்வொரு வார்த்தையும் என்னைக் கவர்ந்தது. 


எனவே இன்றே SLTJ என்ற இவ்வமைப்பின் ஒரு அங்கத்துவனாக நான் இருக்க ஆசைப்படுகின்றேன் என்று, உளப்பூர்வமாக நற்சான்றிதல் வழங்கிய, நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்த, பௌத்த சகோதரருடைய பேட்டி, இவனு(சுவைர் மீரான்)க்கு  கன்னத்தில் அறைந்தாற்போல் இருக்கட்டும்.

மேலும் இந்த கோழை எழுத்தாளர் குறிப்பிடும்போது, இந்தியாவில் எவ்வாறாகிலும், இலங்கையில்
//மார்க்க விடயங்கள் ஆகட்டும், பொது விடயங்கள் ஆகட்டும், எதிலுமே எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எவ்வித நிதானப் போக்கும் இல்லாமல் செயல்படும் அமைப்பாகவே SLTJ இதுவரை காணப்படுகின்றது//
என்று நிதானவான்??? குறிப்பிடுகின்றார்.
(இந்த கிறுக்கன் எழுதிய இவ்வாக்கமே சரியான ஆய்வின்றி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதியுள்ளான் என்பது வேறு விடயம்)
இலங்கையில் SLTJ அமைப்பினர் செய்யும் மார்க்க, மற்றும் சமுதாயப் பணிகளை பார்வையிடhttp://www.sltj.lk/ இந்தச் சுட்டியை அழுத்தவும்.
இந்த மீரானின் வேடிக்கையான தலைப்பு என்னவென்றால்
"ஜம்மியத்துல் உலமா மற்றும் முஸ்லிம் தலைமைகள் SLTJ வை கட்டுப்படுத்த வேண்டும்" என்பதே.
ஸ்ரீலங்கா தௌஹீது ஜமாஅத்து, திட்டமிட்டுச் செய்யும் மார்க்கப் பணிகளாக இருக்கட்டும் அல்லது சமுதாயப் பணிகளாக இருக்கட்டும் அவற்றில் 10% வீதமாவது இலங்கை ஜம்மிய்யதுள் உலமா செய்துள்ளதா என்றால்? அது கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
ஆனால், அரசியல்வாதிகளின் அல்லக்கைகளாக செயல்பட்டு முஸ்லிம்களுக்கு இருந்த சிலபல உரிமைகளை விட்டுக் கொடுத்த பெருமை வேண்டுமென்றால் இவர்களுக்கு இருக்கின்றது எனலாம்.
My article in this regard on FB
உலமாசபை அறிக்கைவிடுவதைவிட மௌனிப்பதே மேல்!!
14/05/2014 அன்று உலமா சபையின் co existance message வழிகாட்டல் என்று ஒரு வெளியீட்டை இட்டு அவர்களுடைய கோழைத்தனத்தை மேலும் படம்போட்டுக் காட்டியுள்ளனர்.
அதாவது பெரும்பான்மையின் மதங்களைப் புண்படுத்த வேண்டாம் என்றும் அவ்வாறு பேசிய இஸ்லாமிய அமைப்புக்கு அன்பான வேண்டுதல் என்றும் கூறியவர் நம்முடைய மதத்தை நிந்தித்தும் குர்ஆனுக்கு பல அபாண்டங்கள் கூரியோருக்கு எந்த அறிவுறுத்தலோ கண்டிப்போ இல்லாத Co Bodubala sena message ஒன்றை முதுகெலும்பற்ற உலமா சபை பிரகடனப் படுத்தியிள்ளது.
Read continue? Pls click below link.
இந்தக் கிறுக்கனின் அடுத்த உளறல்.
//இனவாதத் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருந்த அச்சமான சூழ்நிலையிலும் மாதம்பையில் 5 பேருக்காக அடாத்தாக ஜும்மா ஆரம்பித்து ஜமாத்தே இஸ்லாமியினரை வம்புக்குத் தூண்டியமை,//
இதிலிருந்து புரியும் ஒரு விடயம் என்னவென்றால்? இந்த எழுத்தாளனும் சொந்த நாட்டில், இலங்கை மண்ணில் முஸ்லிம்கள் அநீதிக்கு உள்ளாக்கப் படும்போது அந்த அநீதத்துக்கு எதிராக இலங்கை நாட்டு சட்டத்துக்குக் கட்டுப்பட்டு ஜனநாயக ரீதியில் அதற்கெதிராக குரல்கொடுக்காது, அரேபிய நாட்டு இக்வான்கள் அல்லலுறும்போது அவர்களுக்காக நான்கு விரல்களைக் காட்டும் மஞ்சள் கறுப்புப் பதாதைகளை ஏந்தி போராட்டம் செய்த, இலங்கை போதுபலசெனாவுக்கு எதிராகக் குரல்கொடுத்து ஆர்பாட்டம் செய்யாமல் மாதம்பையில் அவர்களது கூடாரத்திற்கு ஆப்பு விலும் என்று அஞ்சி தௌஹீது மார்கசை உடைத்த காடையர் கூட்டத்தின் கோழை ஜிஹாது கூட்ட அங்கத்தவர் அல்லது அதற்காகக் கூஜா தூக்கும் நடுநிலைவாதி என்பது புலப்பட்டுவிட்டது. 
அதுமாத்திரமன்றி இந்த உலக்கை மேலும் சொல்லுகின்றது.
//எவ்வித முன்யோசனையும் இன்றி புத்தர் மனித மாமிசம் உண்டார் என்று பகிரங்கமாக கூறியமை (பின்னர் அதனை வாபஸ் வாங்கினாலும், அது சிங்கள மக்களிடம் எடுபடவில்லை) என்று முஸ்லிம்களின் இருப்புக்கு வேட்டு வைக்கும் விதமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.//
முஸ்லிம்களது இருப்புக்கு வேட்டுவைக்க முனைந்தது போதுபலசெனா என்ற தீவிரவாத அமைப்பு. அதற்கு எதிராக தைரியமாக குரல்கொடுத்த அமைப்பாக ஸ்ரீலங்கா தௌஹீது ஜமாஅத்தை மற்றும் அரசியல்வாதியாக செயல்பட்ட அசாத் சாலி என்பவரைக் கூறலாமே அன்றி வேறு எவரையும் கூறமுடியாது.
உலமாசபை மற்றும் நடுநிளைனாடகம் ஆடும் அமைப்புக்களான இந்த அரசியல்வாதிகளின் அள்ளக்கைகள் ஆர்பாட்டம் செய்து போதுபலசேனா அமைப்பை, இலங்கை அரசாங்கத்தைக் கண்டிக்காவிட்டாலும் TNTJ இந்தியாவின்  இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டது.
TNTJ Protest in India against BBS
அமேரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, ஜெனீவா சுவிஸ் போன்ற அபிவிருத்தி நாடுகளில்வாழும் இலங்கை முஸ்லிம்கள் ஆர்பாட்டம் செய்து அல்லாஹ்வின் பேருதவியால் மஹிந்த அரசாங்கத்தை கதிகலங்க வைத்தனர்.
உலமா சபை மற்றும் நடுநிலை நாடக அமைப்பின் வழிகாட்டலில் முஸ்லிம்கள் கோழைகளாக்கப் பட்டது மாத்திரமன்றி, முஷ்ரிக்கான செயலில் இறங்க ஆரம்பித்தனர் என்பதே உண்மை.
> இதுகால வரையும் இல்லாமல் இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு மஸ்ஜிதுகளில் தேசிய கொடியை சுபுஹு தொளுதவுடனே ஏற்றுங்கள் என்ற அறிவுரை.
> வெசாக் காலங்களில் மஸ்ஜிதுகளில் தன்சல் கொடுக்கும் புதிய கலாச்சாரம்.
> வெசாக் காலங்களில் முஸ்லிம்களது வீடுகளிலும் வெசாக் விளக்குகளை தொங்க விட்டு வேடிக்கை காண்பித்தனர்.
> பௌத்த விகாரைகளுக்கு பண உதவி, பொருளுதவி, சிரமதானம், சுன்னாஹ் பூசுதல்
போன்ற இன்னோரன்ன காரணங்களை செய்து மத நல்லிணக்கம் செய்யத் தூண்டிய கோழைகள் இன்றும் முதுகெலும்பற்ற பதிவுகளைப் பதிவது வெக்கமில்லையா? கேவலமில்லையா? 
அடுத்து //புத்தர் மனித மாமிசம் உண்டார் என்று பகிரங்கமாக கூறியமை (பின்னர் அதனை வாபஸ் வாங்கினாலும்,//
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும்தான் கூறினார்.
//நாங்கள் எல்லோரும் ஒன்றாக வாழவேண்டாம்.//
மன்னிக்கவும்... வாழவேண்டும்....
ஓய.. பொட்டத்- தன்னெத்த? டாம்.. வெனவா.. டூம்... வெனவா என்று.
இப்படி தவறான வார்த்தைப் பிரயோகம் செய்து அதனை வாபஸ் பெற்று மன்னிப்புக்கேட்டு சரிசெய்வது பேச்சாலர்களிடத்தில் சில சமயங்களில் ஏற்படும் குறைபாடாகும்.
ஆனால் அதனை சிங்களவர்கள் மன்னித்தாலும் இந்த கால்புனர்வுகொண்ட எழுத்தாளன் "மீரான்" வம்புக்கிழுத்து எழுதுவது,  மேலும் தவறான மனப்பதிவை வேண்டுமென்றே வாசகர்களிடத்தில், முஸ்லிம்களிடத்தில் திட்டமிட்டு பதிய வைக்கும் அயோக்கிய செயலாகும்.
இறுதியாக : நடுநிலையுடன் சிந்திப்பவர்கள் எதை விமர்சிக்க வேண்டும்?
கண்டனம் தெரிவிக்க வேண்டியது சுமுகமான முறையில் நடாத்திய SLTJ யிற்கா? அல்லது அத்துமீறி காடைத்தனம் செய்து அராஜகம் பண்ணிய போதுபலசெனா அமைப்பிற்கா?
இனி முஸ்லிம்களுக்கு சுதந்திரமாக அவர்களது செயற்பாடுகளைச் செய்யும் உரிமை இல்லையா? எடுத்தேன் கவுத்தேன் என்பதை SLTJ அமைப்புக்குக் கூறும் விடயம் சரியென்றால்? பல தசாப்தங்களாக இயங்கிவரும் உலமா சபையோ, அல்லது ஏனைய அமைப்புக்களோ இலங்கையில் வாழும் மாற்றுமதத்தொருக்கு இஸ்லாத்தை எத்திவைக்கும் ஏதாவது ஒரு பணியையாவது செய்ததா? சிந்திக்க வேண்டும்.
ஒருவரது நிகழ்ச்சியில் அத்துமீறி நுழைந்து அராஜகம் செய்து அதனை தடுத்து நிறுத்துவது தவரில்லைஎன்றால், இதற்கு முன்னர் கலபொட அத்தே ஞானசார தேரர், முஸ்லிம்-சிங்கள சமாதான சந்திப்பொன்றில் ஹோட்டலுக்குள் புகுந்து கிரமன தேரோவை "மரக்கல-தேரர்" என்று தூற்றி, அவருக்கு சுன்னத்து எடுக்க வேண்டும் என்று கூறி அராஜகம்பண்ணி அடக்குறை செய்தது நியாயம் என்றாகிவிடும்.
மீரான் போன்ற அயோக்கியர்களது ஆக்கத்தை வன்மையாகக் கண்டிக்கப்படல் வேண்டும்.
இவ்வாறான அயோக்கியர்களது ஆக்கங்களை "மடவளை நியுஸ்" போன்றோர் பதிந்து முஸ்லிம்களைக் கோழைகளாக்கும் செயலை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கின்றேன்.
SLTJ article regarding the incident.
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்வைப் பற்றி முஸ்லிம்களில் சிலர் தவறாக சித்தரிக்க முனைந்தாலும், மாற்று மத நண்பர்கள் மத்தியில் இந்நிகழ்வு பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இவன் 
ரஷீத் ஆஷிக் 
லெஸ்டர் 
இங்கிலாந்து.  
09/09/2015.






 
Top