(M.JAWFER JP)
உலகம் உயர்வதற்கும் தாழ்வதற்கும் மீடியாக்களின் பங்களிப்பு மிகவும் பங்களிப்பாக உள்ளது.இதில் நல்ல நடுநிலையான மீடியாக்களும் உண்டு
கேவலம் கெட்ட மீடியாக்களும் உண்டு.இப்போதைய இந்த இருபத்தொராம் நூற்றாண்டில் உலக அழிவுக்கு மிகக்காரணமாக இருப்பது இந்த தரம் கெட்ட மீடியாக்கள்தான்.
இப்போது விடயத்துக்கு வருகிறேன் கடந்த ஆறாம் திகதி தவ்ஹீத் ஜமாஅத்தாரின் கூட்டத்தில் பொது பல சேன என்ற இனவாத கும்பல் அடாவடித்தனம் செய்தது. இதில் முஸ்லிம்களின் இருப்புக்கும், கலாசாரத்துக்கும் பங்கம் விளைவிக்கும் செயலாகவே நடுநிலையாக சிந்திக்கும் சகல இன மக்களும் பார்க்கிறார்கள்.
இந்த இடத்தில் நம் கொள்கை,வேறுபாடுகளை யாரும் கவனிக்க வில்லை மாறாக ஒரு சமூகத்தின் மீது நடைபெறும் அடாவடித்தனமாகத்தான் பார்க்கிறார்கள் பார்க்கவும் வேண்டும்.
இது இவ்வாறு இருக்க நம்மவர்களில் சிலர் தமக்கு எதிரான கொள்கையுடயவர்களுக்கு எதிராக இந்த இனவாத கும்பல் அடாவடி எடுத்ததை.தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தாறுமாறாக கட்டுரைகளை எழுதி அதற்க்கு ஆதரவான வாசகர்களை மகிழ்வித்தும் ,அதற்க்கு எதிப்பான கொள்கையுடையவர்களை வெறுப்பூட்டும் வகையிலும் நடந்து கொள்வதை கண்கூடாக காண முடிகிறது.ஒருவரை ஒருவர் தாக்கித்தாக்கி பின்னூட்டங்கள் எழுதப்படுவதை காணமுடிவதோடு பார்ப்பவர்களை வெறுப்படைய செய்கிறது.
இதில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.நமுடைய இந்த விருப்புவெறுப்புகளை நம் எதிரிகளும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.அப்போது அவர்கள் ஒரு முடிவுக்கு வருவார்கள் குறிப்பிட்ட ஒரு இயக்கத்துக்கு நாம் எதிராக செயல்பட்டால் ஒட்டு மொத்த முஸ்லிம்களும் நம்மீது வெறுப்படைய மாட்டார்கள் என்பதை.
இலங்கை முஸ்லிம்களே நாம் ஒன்றை மட்டும் நாம் புரிந்துகொள்ள வேண்டும் அரபு நாடுகளில் இப்போது ஏற்ப்பட்டிருக்கும் புரட்சி வெடிப்புகள் எதனால் ஏற்பட்டது. முஸ்லிம்கள் குழுக்களாகவும் இயக்கங்களாகவும் பிரிந்து இருந்ததை அறிந்த மேற்குலகம் ஏதாவது ஒரு குழுவை தன கையில் போட்டுக்கொண்டு பிரச்சினையை உருவாக்கியது. இப்போது தான் படையும் தெரியாது மாற்றுப்படையும் தெரியாது தத்தளிக்கும் நிலை ஏற்பட்டு ஒட்டுமொத்த இயக்கங்களும்,குழுக்களும் அகதியாக சென்று தஞ்சமடைய இடமில்லாமல் தவிக்கும் காட்சிகளை நம் கண்களால் காண்கின்றோம்.
இலங்கை முஸ்லிம்களை பிரிக்க எந்தவொரு மேற்கத்திய நாடும் வரவேண்டிய அவசியம் இல்லை.நம்மை பிரிப்பதற்கு நம் நாட்டிலுள்ள.பெரும்பான்மை இனத்தவர்களே போதுமானதாக இருக்கும்.
குறைந்த பட்சம் ஒரு இகக்கத்துக்கு எதிராக போது பல சேனா செயற்பட்டால் அவர்கள் அதை பார்த்துக்கொள்ளட்டும் என்றாவது மௌனமாக இருந்தால் ஒரு வகையில் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்து விடும். அதை விடுத்து எரியிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போன்று நாம் கட்டுரை எழுதுவதும் அதற்க்கு போட்டிபோட்டுக்கொண்டு பின்னூட்டங்கள் எழுதுவதும். முறையான ஒரு செயலாக முடியாது என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளவேண்டும்.