GuidePedia

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான வரி இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான சிறப்பு வரி, கிலோகிராம் ஒன்றுக்கு 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 


உள்ளூர் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இறக்குமதி செய்யப்படும் கிழங்குக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு கிலோவுக்கு 12 ரூபாய் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும் இந்த அதிகரிப்பு காரணமாக கடைகளில் விற்கப்படும் விலைகளில் மாற்றம் ஏற்படாதென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.






 
Top