GuidePedia

(க.கிஷாந்தன்)
நுவரெலியா மாவட்டத்தில் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் அயரபி தோட்டத்தில் 12.09.2015 அன்று மாலை 4 மணியளவில் 14 பேர் குளவிக்கொட்டுக்கு உள்ளாகி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த தோட்டத்தில் ரோத முனி ஆலய வழிபாட்டில் ஈடுபட்டவர்களையே குளவிகள் இவ்வாறு தாக்கியுள்ளன.

மேற்படி ஆலயத்தில் அருகிலுள்ள மரத்திலிருந்த குளவிக்கூடு கலைந்து வந்து சரமாரியாக தாக்கியுள்ளன. 

இத்தாக்குதலில் ஆண்களே பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் காயமடைந்தவர்கள் சிறிது சிறிதாக சிகிச்சையின் பின் வீடு திரும்புவதாகவும் பலத்த காயங்களுடன் காணப்படுபவர்கள் வைத்தியசாலையில் தொடர்ந்தும் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலிங்போனி தோட்டத்தில் 12.09.2015 அன்று பிற்பகல் 12 மணியளவில் தேயிலை மலையில் வேலை செய்துக்கொண்டிருந்த எட்டு தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியுள்ளது.

தேயிலை மலையில் வேலை செய்துக்கொண்டிருந்த போது தேயிலை மரத்தின் அடிப்பகுதியிலிருந்து கலைந்து வந்த குளவி கூடு தங்களை இவ்வாறு தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு இலக்கான எட்டு பேரும் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் ஆறு பேர் பெண்களும் இரண்டு பேர் ஆண்களும் அடங்குகின்றனர்.





 
Top