ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் எதிர்க் கட்சியில் அமரும் சரியான உறுப்பினர்களின் எண்ணிக்கையை இராஜாங்க, பிரதி அமைச்சுக்கள் வழங்கிய பின்னரே தெரியவரும் எனவும், இதன்பிறகு பாராளுமன்றத்தில் தேசிய அரசாங்கத்துக்கு எதிரானவர்களாக பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாகவும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்ஷா தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை இரவு வரையில் சுதந்திரக் கட்சியில் இருந்த பலர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் இணைவதாக மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது. இருப்பினும், தேர்தலின் போது மக்களிடம் முன்வைத்த விஞ்ஞாபனம் தான் சட்ட ரீதியான கொள்கையாக கருதப்படும்.
தேசிய அரசாங்கத்துக்கு எதிரான சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சியில் சுயாதீனமாக செயற்பட சபாநாயகரிடம் அறிவிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியள்ளார்.