(எப்.முபாரக்)
செப்டெம்பர் 12 சிறைக்கைதிகள் தினம். அதனை முன்னிட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை(6) திருகோணமலை சிறைச்சாலையில் சிறைச்சாலை அத்தியட்சகர் யூ.ஜி.டபிள்யூ.தென்னக்கோன் தலைமையில் சிறைச்சாலை மண்டபத்தில் சமய நிகழ்வுகள் நடைபெற்றன. நூறிற்கும் மேற்பட்ட கைதிகள் பங்குபற்றியதோடு கிறிஸ்தவ கைதிகளுக்கு பாதர் ரொபாட் கிங்ஸ்லியும், இஸ்லாமிய கைதிகளுக்கு எ.ஆர்.எம்.பரீட் மௌலவியும்,பௌத்தமத கைதிகளுக்கு காரியா ரத்தின பௌத்த தேரரும், ராமலிங்கம் குருக்களும் தத்தமது சமய நடவடிக்கைகள் பற்றி கைதிகளுக்கு தெளிவுபடுத்தினர். இந்நிகழ்வில் பிரதான ஜொயிலர் சஞ்ஞிவ மற்றும் புனர்வாழ்வு அதிகாரிகள் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.