GuidePedia

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவுக்கான விஜயத்தின் போது அவரைச் சந்திப்பதற்கு ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் பங்காளிக் கட்சிகளும் தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.
இது தொடர்பாக குறித்த கட்சிகளின் தலைவர்களிடமிருந்து உத்தியோகபூர்வ கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து அதிகளவான வேலைப்பளுவைக் கொண்ட விஜயத்தின் மத்தியிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறித்த கட்சித் தலைவர்களை சந்திப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். அதற்கேற்ப சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்கிக் கொடுப்பதில் பிரதமர் அலுவலகம் கடும் சிக்கலை எதிர் கொண்டுள்ளது.
குறைந்த பட்சம் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய பங்காளிக் கட்சித் தலைவர்களையேனும் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிக் கொடுக்க பிரதமர் அலுவலகம் தீர்மானித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியையும் சந்தித்து கலந்துரையாடவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது தொடர்பாகவும் பல்வேறு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.






 
Top