GuidePedia

மேற்கு வங்கத்தில் கிண்டல் செய்த இரண்டு இளைஞர்களின் மூக்கை உடைத்த 16 வயது சிறுமியை அப்பகுதி மக்கள் பாரட்டியுள்ளனர். 
மேற்கு வாங்க மாநிலம் கொல்கத்தாவின் புறநகர் பகுதியில் உள்ள மதியாம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் மாலை நேரத்தில் தனியாக நடந்து சென்றுள்ளார்.
அப்போது 2 இளைஞர்கள் சிறுமியை பிடித்து இழுக்க முயன்றுள்ளனர். இதையடுத்து ஆத்திரமடைந்த அந்த சிறுமி ஓங்கு குத்தி அவர்கள் இருவரின் மூக்கையும் உடைத்தார்.
இதை சற்றும் எதிர்பாராத 2 இளைஞர்களும் வலியால் அலறியடித்துக் கொண்டு தப்பியோடினர். இந்த சம்பவம் குறித்து அச்சிறுமி கூறியதாவது, எங்கள் பகுதியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தும் பலனில்லை. மேலும் என்னையும் யாராவது ஏதாவது செய்யக்கூடும் என்று அஞ்சினேன்
இதனால் கடந்த ஓராண்டாக கராத்தே கற்றேன். இந்நிலையில் அந்த 2 பேரும் என்னை பிடிக்க முயன்றனர். இதனால் அவர்களை தாக்கினேன் என்று கூறியுள்ளார்.






 
Top