GuidePedia

(எப்.முபாரக்)                      
கைதிகள் தினம் என்ற ஒரு தினம் இனிமேல் நமது நாட்டில் இருக்ககூடாது.அதனை இல்லாமலாக்கி சிறைச்சாலைகளில் கைதிகளின் தொகையும் குறைய வேண்டும் அதற்காக வேண்டி குற்றச்செயல்களில் ஈடுபடுவதை குறைக்க வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியும் திருகோணமலை சிறைச்சாலை நலன்புரிச்சங்கத்தின் சிரேஸ்ட ஆலோசகருமான ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார். திருகோணமலை சிறைச்சாலையில் இன்று சனிக்கிழமை(12)      சிறைக்கைதிகள் தினத்தில் நடைபெற்ற விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். திருகோணமலை சிறைச்சாலை அத்தியட்சகர் யு.ஜி.டபிள்யு. தென்னக்கோன் தலைமையில் சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்ற  அந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:ஒவ்வொரு மனிதனும் சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கில் ஒரு குற்றத்தை மேற்கொள்வதில்லை சந்தர்ப்ப சூழ் நிலைகள் தான் ஒருவனை குற்றவாளியாக்குகின்றது.             சிறைக்கைதியாக குற்றச்செயல்களை செய்து விட்டு வந்திருக்கின்றோம் என யாரும் என்னக்கூடாது.மனஉறுதியோடு இருக்க வேண்டும். அரசாங்கத்திற்கு இதன் மூலம் பாரியளவிலான செலவு ஏற்படுகின்றது ஒருவர் சிறைக்குச் சென்றால் ஒருவருக்கு உணவுக்காக வேண்டி முந்நூற்றி ஐம்பது ரூபாய் செலவு ஏற்படுகின்றது.இவ்வாறான செலவுகளை குறைக்கவே நல்லாட்சியில் பல வேலைத்திட்டங்களை அரசு ஏற்படுத்தியுள்ளது என்றார்.           இந்நிகழ்வில் திருகோணமலை சிறைச்சாலை பிரதான ஜெயிலர் ஜே.ஏ.பி.சஞ்ஞீவ,ஜெயிலர் ஜேவர்த்தன புனர்வாழ்வு அதிகாரிகள் மற்றும் திருகோணமலை சிறைச்சாலையின் சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் உப தலைவர் சிரோமன் ,ஹஸன், ரோகினி மல்லிகா,குசுமலதா உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.        





 
Top