GuidePedia

இலங்கை நாடாளுமன்றத்தில் 19வது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவாக கோட்டே நாக விகாரையின் விகாராதிபதி வண மாதுளுவாவே சோபித தேரர், இன்று 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
19வது திருத்தத்தை எல்லாக் கட்சிகளும் ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மாதுளுவாவே சோபித தேரர், இன்று தொடக்கம், கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்.
இன்று இலங்கை நாடாளுமன்றத்தில், 19வது திருத்தம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, நாள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையிலேயே, இவர் இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
கடந்த அதிபர் தேர்தலில் பொதுவேட்பாளரை ஆதரித்த பல்வேறு கட்சிகள் அமைப்புகள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இன்று காலை 9.30 மணியளவில் இந்தப் போராட்டம் ஆரம்பமாகவுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.



 
Top