அதற்கமைய காலை 8.30 மணி முதல் மாலை 4 மணிவரையான காலப்பகுதிக்குள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் புத்தளம் மாவட்ட மின் பொறியிலாளர் பணிமனை அறிவித்துள்ளது.
உயர் அழுத்த மின் கம்பி கட்டமைப்புகளில் முன்னெடுக்கப்படவுள்ள அவசர திருத்த வேலை காரணமாக மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலாவி தொடக்கம் கற்பிட்டிக்கு இடைப்பட்ட பல பகுதிகளில் இந்த மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது .
பனையடி,பூளாச்சேனை,நுரைச்சோலை,கொய்யாவாடி,ஏத்தலை,பாலக்குடா,தளவில்,கந்தக்குடா,கன்டக்குளி உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று முதல் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக புத்தளம் மாவட்ட மின் பொறியிலாளர் பணிமனை தெரிவித்துள்ளது.