(க.கிஷாந்தன்)
நுவரெலியா மாவட்டத்தில் பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ மோரா கிழ்பிரிவு தோட்டத்தில் ஆறு வயது சிறுமியை 22வயது இளைஞன் ஒருவரால் 07.09.2015 அன்று பிற்பகல் பாலியல் வல்லூறவிற்குட்படுத்தியதாக கூறபடும் சந்தேக நபா் 07.09.2015 அன்று மாலை பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமி தனது வீட்டில் தனிமையில் இருந்த வேலை சிறுமியின் வீட்டுக்கு சென்ற 22வயது இளைஞன் ஆறு வயது சிறுமியை பாலியல் வல்லூறவிற்குட்படுத்தியதாக சிறுமியின் பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பாதிப்புக்குள்ளாகிய ஆறு வயது சிறுமி பரிசோதனைக்காக பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதோடு சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 08.09.2015 அன்று அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.