GuidePedia

சிம்ஸ் தனியார் பல்கலைகழகத்தின் 13வது சான்றிதழ் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 2015 செப்டம்பர் 13ம்  திகதி (நாளை) காலை 8.30 மணியளவில் சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் சிம்ஸ் கேம்பஸ்  பணிப்பாளர் நாயகமும், அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளருமான மென்பொருள் பொறியலாளர் அன்வர் எம் முஸ்தபாவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. இச்சான்றிதழானது சாய்ந்தமருது பிரதேச சிம்ஸ் கேம்பஸ் கிளையில் மர்ஹூம் முஸ்தபா புலமைப்பரிசில் திட்டத்தின் கீழே புலமைப்பரிசில் பெற்று கல்வி பயின்ற 200 மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
இந்நிகழ்வில், வர்த்தக, கைத்தொழில் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவருமான அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன், கிராமிய பொருளாதார பிரதியமைச்சரும், கட்சியின் தவிசாளருமான MSS.அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான இசாக் ஹாஜி, முகம்மத் நவவி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் AM. ஜமீல் மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் சிறப்பு அதிதிகளாகக் கலந்து சிறப்பிக்கவுள்ளனர், இந்நிகழ்வில், கல்வியலாளர்கள், விரிவுரையாளர்கள், பெற்றோர்கள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். அத்தோடு, சிறந்த சேவையினை வழங்கி வரும் விரிவுரையாளர்களையும், சிறந்த பெறுபேறுகள் பெற்ற மாணவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.




 
Top