(வை.எம்.பைரூஸ் வாழைச்சேனை)
இன்று உலகலாவிய ரீதியில் எங்கு பார்த்தாலும் முஸ்லிம்கள் மீதான வன்முறைகளும் அத்து மீறிய தாக்குதலும் ஆங்காங்கே நடை பெற்று கொண்டிருப்பதை ஊடகங்களின் மூலம் நாம் கண்டு கொண்டு இருக்கின்றோம்
இவ்வாறான அத்து மீறிய தாக்குதல்கள் எங்கு யாரால் முஸ்லிம்களுக்கு நிகழ்த்தப்படுகிறது என்று பார்ப்போமேயானால் அது குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளான பாலஸ்தீன் யெமன் ஈராக் சிரியா போன்ற நாடுகளி்ல் தான் முஸ்லிம்கள் தங்கள் உயிர்களை இழந்து உடைமைகளை பறி கொடுத்து சொத்துக்களை தாரை வார்த்து சொந்த நாட்டை விட்டே வெளியேற்றப்பட்டு ஆங்காங்கே அகதிகளாகவும் பச்சிளம் குழந்தைகள் எல்லாம் அநாதைகளாகவும் வாழக் கூடிய துர்ப்பாக்கிய நிலையை நாம் காணக் கூடியதாக இருக்கிறது
முஸ்லிம்கள் மீது இந்த தாக்குதல்கள் நடத்துவது யார் என்றால் ..? முஸ்லிம்களின் பரம எதிரியான யூதர்கள்தான் என்பதை நாம் அறிந்து வைத்து இருக்கிறோம் ஆனால் பாலஸ்தீன் நாட்டை மட்டுமே யூதர்கள் ஆக்கிரமித்துள்ளார்கள் என்பதாக நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் உண்மை அது வல்ல இந்த யூத நஷாராக்கள் என்ன செய்கிறார்கள் என்றால் இஸ்லாத்தில் முரண்பட்டுக் கொண்டு வெளியேறிய கூட்டமான ஷீஆ என்ற கேடு கெட்ட கொள்கை வாதிகளுடன் கூட்டு சேர்ந்து முஸ்லிம்களை இந்த உலகத்திலிருந்து அழித்தொழிக்க திட்டமீட்டினார்கள் அதின் ஒரு பங்காக அவர்கள் யூதார்களுடன் மறைமுகமாக முஸ்லிம்களை அழித்தொழித்துக் கொண்டிருக்கிறார்கள் இதனை அறியாத முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கிடையிலயே சன்டையிட்டு நாளுக்கு நாள் அழிந்து கொண்டிருக்கிறார்கள்
உலகளாவிய ரீதியில் கடந்த ஒரு தசாப்த காலமாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துக் கொண்டிருப்பதை பார்க்கும் போது எங்கள் உயிருக்கு மேலான நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்களே மறுமை நாள் நெருங்கும் போது ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொள்ளுவான் ஆனால் கொள்ளுபவனுக்கும் ஏன் நாம் கொன்றோம் என்று தெறியாது கொள்ளப்பட்டவனுக்கும் ஏன் நாம் கொள்ளப்பட்டோம் என்று தெறியாது அந்த நாள் நெருங்கி விட்டதோ என்று எண்ணத்தோன்றுகிறது
குறிப்பாக சிரியாவில்தான் அளவுக்கதிகமான முஸ்லிம்கள் அகதிகளாக இன்று வரை அன்டை நாடுகளுக்கு வெளியேறியிறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் அறிந்து வைத்து இருக்கிறோம் ஏனெனில் மியன் மார் யெமன் பாலஸ்தீன் இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன் முறைகள் நடை பெற்றாலும் அதில் சில அன்னிய நாடுகள் தலையிடுவதால் அவர்கள் தொடர்தேச்சியாக தனது ஆதங்கத்தை வெளிக்காட்ட முடியாமல் அடங்கிக் கொள்கிறார்கள் ஆனால் ஏன் இந்த சிரியா ஷீஆ வாதிகள் மட்டும் அடங்குகிறார்கள் இல்லை அல்லது ஏன் இவர்களை அடக்குவதற்கு எந்த நாட்டாலும் முடியாமல் இருக்கிறது இந்த கேள்வி அனைவரிடத்திலும் எழும்பியுள்ளது.....?
உலகத்தையே உல்லங்கையில் வைத்திருக்கிறோம் என்று தம்பாட்டம் ஆடிக் கொண்டிருக்கும் அமெரிக்காவே இது வரை சிரியா பிரச்சினைக்கு எந்தவொரு தீர்வும் எடுத்து கொடுக்கவில்லை என்பது நாம் அறிந்ததே ஏன் இந்த அமெரிக்கா சிரியாவுக்கு பயப்படுகின்றது என்று பார்ப்போமேயானல் உலகத்தில் அதி கூடிய இராணுவ பலத்ததை கொண்ட ஒரு நாடான ரஷ்யாவும் அணு ஆயுதத்தை அதிகமாக உற்பத்தி செய்யும் ஈரானும் சிரியாவுக்கு பக்கபலமாக இருக்கின்றுது என்ற அச்சமே அமெரிக்கா சிரியா விடயத்தில் தலையிடமால் இருக்க முக்கிய காரணம் என்பதை எம்மால் அறிய முடிகின்றது அதை இன்றைய சிரியாவை ஆக்கிரமித்து கொண்டிருக்கும் கொடுங் கோள் மன்னன் பஸாரே கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த ஒரு பேட்டியில் ரஷ்யாவும் ஈரானும் எனக்கு பக்க பலமாக இருக்கும் போது ஏன் நான் பதவி விலக வேண்டும் என்று கூறியிருப்பதிலிருந்து எமக்கு தெட்டத் தெளிவாக விளங்குகிறது
கடந்த இரண்டு வருடமாக புதிதாக உருவாகி ஈராக்கின் ஒரு பகுதியையும் சிரியாவின் ஒரு பகுதியையும் ஆக்கிரமித்து கொண்டு இருக்கும் ஐ எஸ் ஐ எஸ் என்ற தீவிர வாத குழுவும் இடையில் புகுந்து முஸ்லிம்கள் ஷிஆக்கள் கிறிஸ்த்தவர்கள் என்ற பாகு பாடு இன்றி கொன்று குவித்து கொண்டிருப்பதை பார்க்கும் போது இது எங்கு இருந்து புதிதாக உருவாகியிருக்கின்றது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழும்பியுள்ளது
வெளிப்படையாக நோக்கும் போது நிச்சயமாக இந்த ஐ எஸ் ஐ எஸ் ஷீஆக்களாக இருப்பதற்கு சாத்தியமில்லை ஏனெனில் இவர்கள் ஷீ ஆக்களைத்தான் அதிகமாக குறிவைத்து கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள் பிறகு இஸ்லாமிய கிலாபத்துடைய சவூதி அரேபியா கத்தார் டுபாய் குவைத் லெபனான் ஜோர்தான் துருக்கி போன்ற நாடுகள் கூட்டமைப்பாக சேர்ந்து சிரியாவையும் ஈராக் என்ற எண்னை வலம் மிக்க நாட்டையும் பிடிப்பதற்காக கூட்டு சேர்ந்து உருவாக்கினார்களா என்று சிந்திப்போமேயானால் அதற்கு அறவே சாத்தியமில்லை ஏனெனில் இஸ்லாத்தை முற்று முழுதாக பின்றபற்றக் கூடிய நாடுதான் இந்த சவூதி அரேபியா இந்த நாட்டின கீழ் தான் கூட்டு சேர்ந்து உருவாக்கியிருக்க வாய்ப்பு இருக்கின்றது ஆனால் இஸ்லாமிய வரையரையை அத்து மீறி ஆக்கிரமித்து கொலை வெறித் தாக்குதல் நடத்தும் இந்த தீவிரவாதிகளிடத்தில் இஸ்லாமே இல்லை பிறகு இவர்களை நாம் எவ்வாரு முஸ்லிம் என்று கூற முடியும் ஆகவே இவர்கள் இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் உருவாக்கவில்லை என்றும் தெட்ட தெளிவாக தெறிகிறது
அதன் பிட்பாடு சந்தேகப்பட யாருமில்லை தன்னைத்தானே வல்லரசு என்று கூறும் அமெரிக்காவைத்தான் சந்தேகப்பட வேண்டியுள்ளது ஆனால் ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாதிகளுக் கெதிராக அமெரிக்கா ஏன் தனது படையை அனுப்பியது என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழும்...? ஆனால் அது அமெரிக்காவின ஊடக நாடகமே தவிர உண்மையென்று தக்க ஆதாரத்துடன் இது வரை நிரூபிக்க படவில்லை எனபதே மறைமுகமான உண்மையாகும் இதிலிருந்து அமெரிக்காவுக்கும் ஐ எஸ் ஐ எஸ் தீவிர வாத அமைப்புக்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக மறைமுகமாக விளங்குகின்றது
உலகத்திலயே முதலாவது பணக்கார வரிசை நாடாக இருப்பதும் இஸ்லாமிய கிலாபத்துடைய நாடான கத்தார்தான் ஆனால் இங்கு அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்வதில்லை என்பதை நாம் அறிந்ததே ஆனால் இவர்கள் இந்த சிரியா மியன்மார் பாலஸ்தீன் போன்ற பிரச்சிகைளுக்கு ஏதும் தீர்வு எடுத்து கொடுத்தார்களா என்றால் இல்லை இருந்தும் இலட்ச்சக்கணக்கான மக்களை கொன்று குவித்ததன் பின்பு அனுதாபம் என்ற வகையில் தான் தனது பண உதவியை கத்தார் சவூதி அரேபியா குவைத் டுபாய் போன்ற நாடுகள் வழங்குகின்றன என்பதை நாம் கண்கூடாக பார்த்து கொண்டிருக்கிறோம்
இதிலிருந்து எமக்கு புலப்படுவது என்னவென்றால் உலகத்தில் முஸ்லிம்களுக் கெதிரான வன்முறைகள் ஓரிரு நாடுகளில் நடைபெற்றாலும் அதனை பேச்சு வார்த்தை மூலமோ அல்லது எதிர்தாக்குதல் மூலமோ தனது நாட்டை கைப்பற்றி சுதந்திரமக வாழ சில நாடுகள் கூட்டினைந்து பெற்றுக் கொடுத்துள்ளது
ஆனால் இந்த சிரியா பிரச்சினையில் மற்றும் வேடிக்கை பார்த்துக் கொண்டு வெறும் ஊடகங்களில் கூக்குறலிட்டு கொண்டு இருக்கும் அமெரிக்கா வல்லரசும் இல்லை கோடான கோடி மக்கள் தனது சொந்தங்களை சொத்துக்களை தாய் நாட்டையே இழந்து வெளி நாடுகளுக்கு அகதிகளாக வந்த பிற்பாடு ஆறுதலுக்காக பண உதவி செய்யும் அரேபிய நாடுகளும் வல்லரசு இல்லை
உலகத்தையே ஆட்டிப் படைக்கும் வல்லரசு நாடேன்றால் உலகத்தின் எந்த மூலையில் அக்கிரமங்களும் அநீதிகளும் கட்டவிழ்த்தப்படுகிறதோ அதனை தனது ஆள் பலத்தால் அல்லது ஆயுத பலத்தால் இல்லாதொழிக்க வேண்டும் குறைந்தது பேச்சு வார்த்தையின் மூலமாவது சமாதானத்தை ஏற்படுத்தி மக்களை சுமூக வாழ வழி வகுக்க வேண்டும் அவ்வாறு செய்தால் மாத்திரமே அந்த நாட்டை வல்லரசு என்று கூற முடியும் என்பதே வெளிப்படையான உண்மையாகும்.
அனுப்பிவைத்தவர் - S.MUHAMMAD FARSAN