(எப்.முபாரக்)
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் முல்லைத்தீவிலிருந்து இரன்டு யானைத்தந்தங்களைச் திருகோணமலைக்குச் கொண்டு சென்ற நான்கு பேரையும் இம்மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குச்சவெளி நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை(11) உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோதமான முறையில் முல்லைத்தீவிலிருந்து வேன் ஒன்றில் திருகோணமலைக்குச் கொண்டு சென்ற போது தென்னைமறவாடி சந்தியில் வைத்து பொலிஸ் விஷேட அதிரடைப் படையினரால் நேற்று வியாழக்கிழமை(10) மாலையில் கைது செய்து புல்மோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.சந்தேக நபர்கள் நால்வரும் இரண்டு யானைத்தந்தங்களை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வேன் புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.சந்தேக நபர்களை புல்மோட்டைப் பொலிஸார் குச்சவெளி நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதிபதி விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.