(எப்.முபாரக்)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் ஐந்து பேர் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு விரைவில் புதியவர்கள் நியமிக்கப்படுவார்கள்.என எதிர்பார்க்கப்படுகினறது. கடந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு பேரும் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேருமாக மொத்தமாக பதினான்கு பேர் கிழக்கு மாகாண சபைத் உறுப்பினர்கள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர்.இவர்களுள் அம்பாரை மாவட்டத்திலிருந்து மூன்று பேரும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து ஒருவரும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து ஒருவருமாக மொத்தமாக ஐந்து பேர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டனர்.இந்த ஐந்து பேரும் தமது கிழக்கு மாகாண சபைத் உறுப்பினர் பதவி விலகல் கடிதங்களை ஏற்கனவே மாகாண சபைத்பேரவைச் செயலாளரிடம் கையளித்துள்ளனர். இந்த வெற்றிடங்களை நிரப்புமாறு தேர்தல் ஆணையாளருக்கு தாம் அறிவித்துள்ளதாக பேரவைச் செயலாளர் எம்.சீ.எம்.செரீப் தெரிவித்தார்.