GuidePedia

எதிர்வரும் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படும் என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக தேர்தலை நடாத்த அராசங்கம் உத்தேசித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை தீர்மானம் எடுத்து, திகதியை அறிவித்தால் தேர்தலை நடத்த முடியும்.
ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமாயின் நாடாளுமன்றில் அவற்றைச் செய்து திருத்தங்களை அமுல்படுத்த முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் முதியங்கன ரஜமஹா விஹாரையில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.




 
Top