GuidePedia

சட்டமா அதிபரின் செயற்பாடுகளுக்கு புரவெசி பலய என்ற அமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
அவன் கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல், குமரன் பத்மநாதன் மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்து 20 வழக்குகள் தொடர்பில் சட்ட மா அதிபர் நடவடிக்கை எடுக்காமை குறித்து இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 20 மனுக்கள் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவன்கார்ட் மற்றும் குமரன் பத்மநாதன் குறித்த வழக்குகளை விசாரணை செய்ய சட்டமா அதிபர் போதியளவு ஒத்துழைப்பை வழங்கவில்லை என புரவெசி பலய அமைப்பின் பேச்சாளர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் இந்த செயற்பாடுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சி பீடம் ஏற்ற அர்ப்பணிப்புக்களைச் செய்த மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அவன்கார்ட் வழக்கு முடிவுறுத்திக்கொள்ள சட்டமா அதிபர் தீர்மானித்த காரணத்தினால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
குமரன் பத்மநாதனுக்கு எதிரான வழக்குத் தொடர போதியளவு காரணிகள் கிடையாது என அண்மையில் சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்திருந்தது.
குறித்த சம்பவங்கள் தொடர்பில் குற்றவாளிகளை நிரூபித்து தண்டனைப் பெற்றுக்கொடுக்க போதியளவு ஆதாரங்கள் எம்மிடம் உண்டு.
குற்றவாளிகளை தண்டிப்பதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு நேரத்தை ஒதுக்கித் தருமாறு கோரி, ஜனாதிபதிக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.




 
Top