(அமீனுல் அஸ்லம்)
எட்டாவது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் ஐயாவுக்காகவும் நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சிக்காகவும் வாழைச்சேனைப் பொது மக்களால் (வெள்ளிக்கிழமை) மாலை 06.00 மணிக்கு வாழைச்சேனை இந்து ஆலயத்தில் விஷேட மத வழிபாடுகள் இடம்பெற்றன. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஆர்.சம்பந்தன் அவர்களுக்காகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் மற்றும் நாட்டு மக்களுக்காகவும் இம்மாத வழிபாடுகள் இடம் பெற்றதுடன், இன்றைய நினைவாக தென்னங்கன்று நடப்பட்டது, அத்துடன், இந்நிகழ்வை பொது மக்கள் பட்டாசு கொழுத்தியும் தங்களது சந்தோசத்தினை வெளிப்படுத்தினர்.