இனிய மார்க்கம் நிகழ்ச்சி பற்றிய மாற்று மத நண்பர்களின் கருத்துக்கள் அடங்கிய வீடியோ
நாடு முழுவதும் சிங்களம் / தமிழ் ஆகிய மொழிகளில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” என்ற பெயரில் இஸ்லாம் பற்றிய மாற்று மத நண்பர்களின் கேள்விகளுக்கு பகிரங்கமாக பதிலளிக்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றமை அனைவரும் அறிந்ததே!
நாடு முழுவதும் சிங்களம் / தமிழ் ஆகிய மொழிகளில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” என்ற பெயரில் இஸ்லாம் பற்றிய மாற்று மத நண்பர்களின் கேள்விகளுக்கு பகிரங்கமாக பதிலளிக்கும் நிகழ்வு நடைபெற்று வருகின்றமை அனைவரும் அறிந்ததே!
இந்நிலையில் கடந்த 06.09.2015 அன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஹெம்மாதகம கிளை சார்பாக ஹெம்மாதகம க்ரீன் வீச் ஹோட்டலில் வைத்து இதே நிகழ்ச்சி நடைபெற்ற போது, பொது பல சேனாவின் காடையர்கள் குறித்த நிகழ்ச்சியில் அடாவடித்தனம் செய்தமையினால் நிகழ்ச்சி இடை நிறுத்தப்பட்டது.
ஹெம்மாதகம நிகழ்வு தொடர்பாக கருத்துக்களை சமூக வலை தளங்களில் பதிந்து வரும் சில சகோதரர்கள். தவ்ஹீத் ஜமாத் நடத்தி வரும் இந்நிகழ்வு தேவையற்றது என்ற கோணத்தில் கருத்துப் பதிந்து வருகின்றார்கள்.
நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ளது. இப்போது அதனை கெடுக்கப் பார்க்கின்றார்கள்.
என்றெல்லாம் மைத்திரி ஆட்சியை ஏதோ மலக்குமார்களின் ஆட்சியைப் போல் நினைத்துக் கொண்டு, மைத்திரி ஆட்சி வந்தவுடன் இனவாதமே இல்லாமல் ஆகிவிட்டதாக நினைத்துக் கொண்டு கருத்துப் பதிந்து வருபவர்கள் அல்லாஹ்வைப் பயந்து கருத்துக்களைப் பதிய வேண்டும்.
யாருக்கும் பயந்து சத்தியத்தை மறைக்கும் கூட்டமல்ல தவ்ஹீத் ஜமாத்.
#இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றதா?
#இஸ்லாம் பெண்களை அடிமைப் படுத்துகின்றதா?
#முஸ்லிம்கள் ஆடு, மாடுகளை அறுப்பது ஏன்?
#முஸ்லிம் ஆண்கள் தாடி வைப்பது ஏன்?
#முஸ்லிம் பெண்கள் உடலை மறைத்து ஆடை அணிவது ஏன்?
#ஹழால் உணவு ஏன்? எதற்கு?
#குர்ஆன் சொல்லும் சத்தியக் கருத்துக்கள் என்ன?
போன்ற இஸ்லாம் பற்றிய எத்தனையோ சந்தேகங்களுக்கு பகிரங்கமாக, நளினமாக பதில் அளிக்கும் ஒரு சிறப்பான நிகழ்ச்சியையே ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் முன்னெடுத்து வருகின்றது.
மாற்றுமத சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் இஸ்லாம் பற்றிய சந்தேகங்களை இனியாவது நாம் தெளிவு படுத்தா விட்டால், இனி வரும் காலங்களிலும் இஸ்லாம் மீதும், முஸ்லிம்கள் மீதும் உள்ள தப்பான எண்ணங்கள் பெரும் களவரத்திற்கே வித்திட்டு விடும் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் – இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்வைப் பற்றி முஸ்லிம்களில் சிலர் தவறாக சித்தரிக்க முனைந்தாலும், மாற்று மத நண்பர்கள் மத்தியில் இந்நிகழ்வு பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்பதற்கு மாற்றுமத நண்பர்கள் இது பற்றி தெளிவிக்கும் கருத்துக்களே போதிய ஆதாரங்களாகும்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட / கலந்து கொள்கின்ற மாற்று மத நண்பர்கள் அனைவரும் இந்நிகழ்வு தொடர்பில் சிறப்பான அபிப்பிராயங்களையே வெளியிட்டு வருகின்றார்கள்.
இறைவனின் சத்தியக் கருத்துக்களை யாருக்கும் சளைக்காமல் எடுத்துச் சொல்லி வரும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஒருக் காலும் அசத்தியத்திற்கு அடி பணியாது என்பதுடன், அசத்தியவாதிகளை அடையாளப் படுத்தும் பணியில் தொடர்ந்தும் ஈடுபடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.