GuidePedia

சகல மதங்களும் மக்களின் நல் வாழ்வையே வலியுறுத்துகின்றன. ஒன்றிணைந்து வாழ்வதையே தவிர பிரிந்து பிளவுபட்டு வாழ்வதை மதங்கள் அனுமதிக்கவில்லை. பிளவு ஒருபோதும் தார்மீகமாகாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
குறுகிய அரசியல் நோக்கங்களின்றி மனசாட்சிக்கு நேர்மையாகவும் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் செயற்படுவது முக்கியம். பிரிந்து செயற்படுவது சக வாழ்வுக்கு வழிவகுக்காது. அதனால் தான் நாம் தேசிய அரசாங்கம் என்ற கோட்பாட்டை விரும்பினோம்.
தேசிய சக்தியாக இணைந்துள்ள இந்த அரசாங்கத்தை குலைக்கலாம் என எவரும் வீண் கற்பனை செய்யக்கூடாது. 2020 வரை மிக ஸ்திரமானதாக நல்லாட்சி அரசாங்கம் தொடரும் எனவும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கை வெளியிட்டார்.
நாம் எந்தவொரு சர்வதேச சக்திகளுக்கும் அடிபணியப் போவதில்லை. எந்தவித வெளி அழுத்தங்களுக்கும் நாம் இடமளிக்கப்போதில்லை.

அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார். 





 
Top