GuidePedia

விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் கே.பி. மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் எவண்ட் கார்ட் ஆயுதக்கப்பல் தொடர்பில் புலனாய்வு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சிவில் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
இது குறித்து சிவில் அமைப்புகள் கொழும்பில் நேற்று ஊடக சந்திப்பு ஒன்றையும் நடத்தியிருந்தன.
இதன்போது கருத்துவெளியிட்ட சிவில் அமைப்புகளின் முக்கியஸ்தர் சமன் ரத்னப்பிரிய, கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டபோது அவர் விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என்றே அன்றைய அரசாங்கம் அடையாளப்படுத்தியிருந்தது.
அவ்வாறான நிலையில் அவர் மீது எதுவித குற்றச்சாட்டுகளும் இல்லை என்று அண்மையில் சட்டமா அதிபர் அறிவித்திருப்பது ஆச்சரியப்பட வைக்கும் விடயமாகும்.
இதே போன்று எவண்ட் கார்ட் நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தில் சட்டவிரோத ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அப்போது பரபரப்பான செய்திகள் வெளியாகியிருந்தன. எனினும் தற்போது குறித்த நிறுவனம் தொடர்பான வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்கள் சந்தேகத்துக்கு உரியவையாகும்.
எனவே இவை தொடர்பில் புலனாய்வுப்பிரிவினர் புதியதாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் சிவில் அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.





 
Top