GuidePedia

தீவிரவாதிகளுக்கு பயந்து இராணுவத்தை விட்டு தப்பி சென்று வெளிநாட்டில் வேலை செய்து, அண்ணனின் அதிகாரத்தை பயன்படுத்தி பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட ஒருவரின் ஆசனத்தில் தான் அமர மாட்டேன் என பீலட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு இடம்பெற்ற தொலைகாட்சி நிகழ்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
நான் தற்போது பெற்று கொண்டிருக்கும் பீல்ட் மார்ஷல் பதவி மிகவும் உயர்வானதொன்றாகும்.
பாதுகாப்பு செயலாளர் பதவியை ஏற்றுகொண்டு இராணுவத்தினால் என்னிடம் வழங்கப்பட்டிருக்கும் எனது சிறந்த பதவியை அவமதிக்க மாட்டேன்.
அத்துடன் தற்போது எனக்கு அமைச்சரவை அமைச்சரை விடவும் சிறப்பான பதவி கிடைத்துள்ளமையினால் பாதுகாப்பு செயலாளர் பதவியை பெற்றுகொள்ள போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



 
Top