(எப்.முபாரக்)
கந்தளாய் பிரதேசத்தில் 18 மில்லி கிராம் ஹோரோயினை தம் வசம் வைத்திருந்த ஒருவரை நேற்று செவ்வாய் கிழமை(8) பகல் கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஒருவர் பொலிஸாருக்கு சந்தேக நபர் ஹோரோயின் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்று பொலிஸார் சோதனை மேற்கொண்ட போது காற் பாதணிக்குள் ஹோரோயின் 18 மில்லி கிராம் இருந்ததை கண்டு பிடித்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரை கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொண்டு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.