GuidePedia

(TNN)
வட மாகாண அபிவிருத்திக்கென பிரத்தியேக அமைச்சு ஒன்று நிறுவப்படுகின்றது என்று ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கிடைக்கின்ற தகவல்கள் கூறுகின்றன.
வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக எஸ். பி. நாவின்ன, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சராக சம்பிக்க ரணவக்க, தென் மாகாண அபிவிருத்தி அமைச்சராக சாகல ரத்நாயக்க ஆகியோர் இன்று மதியம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து உள்ளனர்.
இந்நிலையில் புதிய தேசிய அரசாங்கத்தில் வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களின் அபிவிருத்திக்கும் பிரத்தியேக அமைச்சு அமைக்க உத்தேசித்து உள்ளனர் என்று கூறப்படுகின்றது.
இது தொடர்பாக தமிழர் தரப்புடன் ஜனாதிபதி பேச்சுக்களில் ஈடுபட்டு உள்ளார் என்றும் இச்செய்திகள் சொல்கின்றன.



 
Top