மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஜின்னா நகரில் இளைஞர் ஒருவர் இன்று செவ்வாய் கிழமை அதிகாலை துப்பாக்கி சூட்டில் பலியாகியுள்ளார்.
ஜின்னா நகர் பகுதியிலுள்ள தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சுல்தான் முகம்மது இக்றாம் (வயது26) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணையில் மூதூர் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.