GuidePedia

(எப்.முபாரக்)                    
திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் கஞ்சா செடிகளை வளர்ந்து வந்த ஒருவரை நேற்று சனிக்கிழமை(5)மாலையில் கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.         கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்திபுர பகுதியில் சந்தேக நபர் வீட்டின் பின்புரத்தில் மூன்று கஞ்சா செடிகளை வளர்த்து வந்த போது பொலிஸாருக்கு ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் சோதனை மேற்கொண்ட போது கஞ்சா செடிகள் வளர்ப்பதை கண்டறிந்ததாகவும் அச்செடிகளை அகற்றியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.                             சந்தேக நபரை தடுத்து விசாரணைகள் மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  



 
Top