தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களாக மேலும் மூவர் இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
அதன்படி ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் மலிக் சமரவிக்ரம அபிவிருத்தி மூலோபாய சர்வதேச வர்த்தக அமைச்சராக அமைச்சராக பதவிபிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் பைஸர் முஸ்தபா உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சராகவும் விஜித் விஜிதமுனி சொயிஸா நீர்ப்பாச நீர்வள முகாமைத்துவ அமைச்சராகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிபிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.