(M.JAWFER. JP)
இலங்கை உட்பட உலகின் பல நாடுகளில் இருந்தும் மிகப்பெருமதி வாய்ந்த ஹஜ் செய்வதற்காக புனித மக்கா நோக்கி பிரயாணம் மேற்கொள்கிரார்கள்.சிற்சில வருடங்களில் சில ஆபத்தான விடயங்கள் ஏற்பட்டு பல மரணங்கள் ஏற்பட்டு வருகிறது.இது வல்ல அல்லாஹ் வின் விதியில் எழுதப்பட்ட முடிவாக உள்ளது என்பதுதான் நம் முஸ்லிம்களின் ஈமானிய நம்பிக்கையாக உள்ளது.
இதில் யாரும் யாரையும் பொதுவாக சவுதி அரசை குறை கூறுவது வழக்கமாக உள்ள விடயமாக உள்ளது. இதில் உலகில் உள்ள மனித உரிமை அமைப்புகள் மேற்கெத்திய நாடுகளின் முஸ்லிம்களினதும் முஸ்லிம் நாடுகளினதும் குறைகாணும் நோக்கோடு பார்க்கும் திறமைகளை காட்ட ஆரம்பிப்பார்கள்,என்பது உறுதி.இந்த சந்தர்ப்பத்தில் நம் இளம் சமுதாயத்தார்கள். இந்த மேற்க்கத்திய முதலைக்கண்ணீர் வடிக்கும் சூட்சிகளுக்கு அடிபணிந்து கண்ட கண்ட மாதிரியல்லாம் பேஸ்புக் போன்ற இணையதளங்களில் சவுதி அரசையும் அங்குள்ள அதிகாரிகளையும் குறை கூற ஆரம்பிப்பார்கள்.
நாம் ஒன்றை புரிந்துகொள்ளா வேண்டும்.நம் ஈமானின் அத்தியாயமான விதியில் இருந்து வழிதவறிவிடக்கூடாது. எது நடந்தாலும் அல்லாஹ்வின் ஏற்பாட்டில்தால் நடக்கிறது.நம்மை விட இந்த மரணமடைந்த ஹஜ்ஜாஜிகள மீது வல்ல அல்லாஹ் மிகவும் இரக்கமுடையவன்.இவர்கள் இவ்விடத்தில் மரணித்து சொர்க்கம் போக அல்லாஹ் விரும்பும்போது நம் யாராலும் அதை தடுக்க முடியாது.
இஹ்ராமுடன் மரணமடைவோரை இஹ்ராமுடன் அடக்கம் செய்யுமாறும். கியாமத்து நாளில் இஹ்ராமுடன் தக்பீர் சொன்னவர்களாக எழுப்பப்படுவார்கள் என்றும் நபி ஸல் )அவர்கள் சொல்லியுள்ளார்கள் .இதை விட ஒரு மனிதனுக்கு என்ன வேண்டும். ஆகவே இணையத்தில் கருத்து வெளியிடும் சகோதரர்கள் மிகவும் கவனமாக கருத்துக்களை பதிவு செய்து நம் ஈமானை பாது காத்துக்கொள்ள முயல வேண்டும்.இதுவெல்லாம் அல்லாஹ்வுடைய கடமை சம்மந்தமான விடயங்கள் நாம் மிகக்கவனமாக கையாள வேண்டியுள்ளது.