நாட்டின் ஏற்பட்ட நல்லாட்சியின் விளைவாக எதிர்க்கட்சித்தலைவராக சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் நாட்டிலுள்ள சிங்கள மக்கள் மத்தியில் நல்லென்னத்தை விதைக்க வேண்டிய பாரிய பொறுப்பு இருக்கின்றது என ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை ஜிந்துப்பிட்டியில் இடம்பெற்ற சனசமூக நிலைய கட்டட திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாத்தை ஐக்கிய தேசியக்கட்சி ஏற்படுத்தியுள்ளது. ஜனாதிபதி வேட்பாளராக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளரை மைத்திரிபால சிறிசேனவை அங்கீகரித்து அவரை ஜனாதிபதியாக்கியதன் மூலம் இந்நிலைமை ஏற்படுத்தப்பட்டது.
இன்று ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து நல்லாட்சியின் ஊடாக நல்லபல அரசியல் மாற்றங்களை ஏற்படுத்துகின்றனர். இது நாட்டில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக புறையோடிப்போயிருந்த இன முறுகலுக்கு விடிவை பெற்றுத்தரக்கூடியதாக இருக்கும் என நம்புகிறேன்.
இந்த நல்லாட்சியின் ஓர் அங்கமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் பாரிய பொறுப்புகள் இருக்கின்றன. கடந்த காலங்களில் தமிழ்ர்களின் உரிமைகள் குறித்து துணிவுடன் கரல் கொடுத்த சம்பந்தன் தற்போது முழு நாட்டு மக்களுக்காகவும் எதிர்க்கட்சி தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார்.
சிறுபான்மையினர் குறித்து சில சிங்கள தலைவர்கள் பெறும்பான்மை மக்களிடத்தில் தற்பபிப்பிராயத்தை தோற்றுவித்துள்ளனர். இதனால் பலர் நம்மை வேறுவிதமாக பார்க்கின்றனர். நாட்டை நேசிக்காதவர்கள் என்று குற்றம் சுமத்துகின்றனர்.
இலங்கையிலுள்ள சிறுபான்மையினர் தொடர்பில் நம்பிக்கையின்றி சந்தேககண்கொண்டு பார்க்கும் பெரும்பான்மையினரிடத்தில் நல்லென்னத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு தற்போது சம்பந்தனுக்கு கிடைத்திருக்கின்றது.
நாட்டிலுள்ள மக்களுக்கு எங்கு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதற்காக குரல்கொடுக்கவேண்டிய முதற்பொறுப்பு சமபந்தனுக்கு இருக்கின்றது. இதன்மூலம் சிறுபான்மையினர் குறித்த நல்லெண்ணம் பெரும்பான்மையினர்களிடத்தில் உருவாகும்.
இந்தியாவில் அப்துல் கலாம் ஜனாதிபதியாகவும் பிரதமராக மன்மோகன்சிங்காலும் முடிந்தது. அதேபோன்று அமெரிக்காவில் ஒபாமாவிற்கு ஜனாதிபதியாக முடிந்தது. அதுபோன்று சம்பந்தனின் செயற்பாடுமூலம் சிங்கள மக்கள் மத்தியில் சிறுபான்மையினர் குறித்த நல்லெண்ணம் தோன்றுமாயின் இலங்கையிலும் சிறுபான்மையினரால் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் உருவாகமுடியும் என்றார்.
மீடியா பிரிவு
பா.உ. முஜிபுர் ரஹ்மான்