GuidePedia

குறைந்த கொழுப்பு இதயத்துக்கு நல்லதென நம்பப்பட்டு வந்த நிலையில், குறைந்த ரத்த அழுத்தமும் இதய பிரச்சனையை தடுக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழக மருத்துவ பேராசிரியர் ஜே. மைக்கல் காஸியானோ தலைமையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் மூலம் இது நிரூபணமாகியுள்ளது.
இவர் தலைமையிலான குழு அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்த 50 வயதுக்கும் மேற்பட்ட 9 ஆயிரத்து முன்னூறு பேரிடம் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வின் முடிவில் குறைந்த ரத்த அழுத்தம் இதய பிரச்சனைகளை போக்கி மாரடைப்பை தடுக்கும் என தெரியவந்துள்ளது. இதுவே இத்துறையில் நடத்தப்பட்ட நீண்ட கால ஆய்வாகும்.
இந்நிலையில் ஐம்பது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கு 120க்கும் கீழேயும், அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு 140-150 வரையும் ரத்த அழுத்தம் இருக்க வேண்டும் என இந்த மருத்துவக் குழு அறிவுறுத்தியுள்ளது.





 
Top