GuidePedia

ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்காலத்திற்கான முதலீட்டை செய்வதற்காக நிதியம் ஒன்றை ஏற்படுத்த போவதாகவும் அதற்கான ஆரம்ப கட்டமாக 200 மில்லியன் ரூபாவை வைப்புச் செய்ய போவதாகவும் அந்த கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 
சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 69 வது ஆண்டு நிறைவு மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் முன்னணியின் பணிகளை இலகுவாக்கும் நோக்கில், 4 மாடிகளை கொண்டு கட்டிடம் ஒன்றை பெற்றுக்கொடுக்க உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் எதிர்காலத்தை எண்ணி, உலகில் உள்ள பிரதான கட்சிகள் ஏற்கனவே நிதியங்களை ஏற்படுத்தியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியும் அவ்வாறான முறையையே மேற்கொள்கிறது எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.



 
Top