GuidePedia

ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின்போது தன்னை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளிக்குமாறு இலங்கையின் கிரிக்கெட் வீரர் ஓருவர் கேட்டுக்கொண்டதாக முன்னாள் இராணுவதளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகினால் தனக்கு 100 ஏக்கர் நிலம் உட்பட பல விடயங்களை வழங்க அவர்கள் முன்வந்தனர்.

ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான போராட்டத்தை கைவிடமாட்டேன், மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவாக செயற்பட்ட பௌத்த மதகுருமார் அமைப்பொன்றும் என்னை தேர்தல் பிரச்சாரங்களிலிருந்து விலகுமாறு கோரியது.

தனக்கு சாதகமான நிலை மாறிவருவதை உணர்ந்த பின்னரே ராஜபக்ச என்னுடைய நட்பை மீண்டும் நாடினார், எனது மனைவியின் கையடக்கத் தொலைபேசிக்கு இது தொடர்பாக பல குறுஞ் செய்திகள் வந்தன. என அவர் தெரிவித்துள்ளார்.



 
Top