GuidePedia

(க.கிஷாந்தன்)

அட்டன் கல்வி வலயத்தின் ஆசிரியர்களின் கொடுப்பனவை இடைநிறுத்தப்பட்டமை தொடர்பாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ளப்படவிருந்த ஆர்ப்பாட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கல்வி சமூக சம்மேளத்தின் பொது செயலாளர் ஆர்.சங்கர் மணிவண்ணன் தெரிவித்தார். 

இது குறித்து அவர் கருத்துத்தெரிவிக்கையில் குறித்த ஆசிரியர்களின் சம்பளம் அட்டன் கல்வி வலய காரியாலயத்தினால் நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நியாயம் வேண்டியும் போராட்டம் செய்ய ஏற்பாடு செய்திருந்தோம், எனினும் அதற்கு முன்னர் கலந்துரையாடயல் ஒன்றை மேற்கொள்வதற்காக அட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் குறித்த சம்மேளத்தின் தலைவர் உதவியை பெற்றுக்கொண்டு கல்வி பணிப்பாளரோடு ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

அதன்பின் கல்வி பணிப்பாளர் இனிவரும் காலங்களில் சம்பளம் நிறுத்துவது தவிர்க்கப்படும் என தெரிவித்ததையடுத்து நாங்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு முடிவு செய்தோம். மேலும் இவ்வாறு சம்பளம் நிறுத்துவதற்கு மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு மட்டும் தான் அதிகாரம் உண்டு. கல்வி பணிப்பாளருக்கு அதிகாரம் இல்லை என இதன்போது தெரிவித்தார்.

இதே வேளை இது குறித்து அட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் தெரிவிக்கையில் யாருடைய ஊதியத்தையும் நிறுத்தும்படி நான் எவருக்கும் கட்டளையிட வில்லை. இது நிர்வாக ரீதியாக இடம்பெறும் செயற்பாடுகளில் ஒன்றுதான். ஆசிரியர்கள் இடமாற்றமானது பல்வேறு செயற்பாடுகளின் அடிப்படையில் இடம்பெறும் ஒரு விடயம்.அதன் படி குறித்த ஒரு பாடசாலையிலிருந்து ஒரு ஆசிரியர் வேறு ஒரு பாடசாலைக்கு இடமாற்றம் பெறுவாராயின் அவரின் சம்பளம் அப்பாடசாலையில் இருந்து இடைநிறுத்தப்படும். 

அதே வேளை இடமாற்றம் செய்யப்பட்ட பாடசாலைக்கு அவர் குறித்த திகதியில் சென்று பணியை பொறுப்பேற்காவிடின் அது தொடர்பான எந்த வித ஆவணங்களும் குறிப்புகளும் வலயக்கல்வி காரியாலயத்திற்கு கிடைக்காத பட்சத்தில் கணக்கீட்டுப்பிரிவில் குறித்த ஆசிரியருக்கான சம்பளம் இடைநிறுத்தப்படும். இது நிர்வாக ரீதியக வழமையா இடம்பெறும் பணியாகும். 

யார் யார் பணியை பொறுப்பேற்கவில்லை எவருக்கு சம்பளம் நிறுத்தப்பட்டிருக்கின்றது என்ற விடயங்களை தனிப்பட்டரீதியாக வலயக்கல்வி பணிப்பாளர் ஆராய்ந்து கொண்டிருப்பதில்லை. எனினும் இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களுக்கு தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து எழுத்து மூலம் பணிப்பாளருக்கு அறிவிக்க போதிய கால அவகாசம் உள்ளது.சிலர் சுகவீனம் காரணமாக குறித்த தினத்தில் பணியை பொறுப்பேற்பதில் சிக்கல்கள் இருக்கும். அவர்கள் அதற்கான காரணத்தை உரிய முறையில் தெரிவித்து தமது சம்பளத்தை காரியாலயத்தில் மீளப்பெற்றுக்கொள்ளலாம். அப்படி பலர் வந்து பெற்று சென்றிருக்கின்றனர். இந்த விடயங்களை ஆசிரியர்கள் அறிந்து கொள்வது நல்லது . 

இது தொடர்பாக எந்த நேரத்திலும் என்னை வந்து சந்திக்கலாம். அது மட்டுமல்லாது அரசாங்க சேவையாளர்களுக்கான ஸ்தாபனக்கோவையில் ஆசிரியர்கள் கடை பிடிக்கப்பட வேண்டிய அம்சங்கள் பற்றிய தௌிவை ஆசிரியத்தொழிற்சங்கங்களும் ஆசிரியர்களும் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்



 
Top