GuidePedia

மேல் மற்றும் வடமேல் மாகாண முதலமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.
இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
முதலமைச்சர் தெரிவு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
மேல் மாகாணசபையின் முதலமைச்சர் பதவியை வகிக்க தமக்கு உண்டான தகுதிகளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தியுள்ளனர்.
காமினி திலகசிறி, ஹெக்டர் பெத்மகே, சுனில் விஜேரட்ன மற்றும் ரஞ்சித் சோமவன்ச ஆகியோர் இவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளனர்.
எனினும், இம்முறை மேல் மாகாணசபையின் முதலமைச்சர் பதவியை களுத்துறை மாவட்டத்திற்கு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ரஞ்சித் சோமவன்சவுக்கு இந்தப் பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறறது.
இதேவேளை, வடமேல் மாகாணசபையின் முதலமைச்சர் பதவிக்காக சந்தியா குமார ராஜபக்ச, குணதாச தெஹிகம, வடமத்திய மாகாணசபையின் தலைவர் தர்மசிறி தசநாயக்க மற்றும் முன்னாள் முதலமைச்சர் அதுல விஜேசிங்க ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.



 
Top