GuidePedia

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகள், சத்துரிக்கா சிறிசேனவின் பதவிநிலை குறித்து ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இன்னும் உறுதியான தகவல் எதனையும் வழங்கவில்லை.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்த விடயத்தை தொடர்ந்தும் எழுதி வருகிறது.
அரசாங்கப் பணியாளர்களுடன் இணைந்து சந்துரிக்கா அண்மையில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் பல நிகழ்வுகளில் பங்கேற்றார்.
இந்த நிகழ்வுகள் பொலநறுவையில் இடம்பெற்றன. இதன்போது கருத்துரைத்துள்ள சத்துரிக்கா, தமது தந்தையின் கனவை நனவாக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
எனினும் குடும்ப ஆட்சிக்கு வழியேற்படுத்தப் போவதில்லை என்று ஜனாதிபதியின் கூற்றுக்கு இது மாறாக இருப்பதாக ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்தில் எவ்வித பொறுப்புக்களையும் கொண்டிராத சத்துரிக்கா எவ்வாறு அரசப்பணியாளர்களுடன் இணைந்து சேவைகளை மேற்கொள்ள முடியும் என்று ஆங்கில ஊடகம் ஜனாதிபதி ஊடகப்பிரிவிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
எனினும் ஜனாதிபதியின் ஊடகம் இன்னும் உரிய பதில் எதனையும் வழங்கவில்லை. ஜனாதிபதியும் இந்த விடயத்தில் மௌனமாக இருந்து வருகிறார்.




 
Top