GuidePedia

ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் பிரதான கட்சிகளுக்கிடையில் அடுத்த பிரதமர் யார் என்பது குறித்து பாரிய கருத்து மோதல்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த பிரதமர் யார் என்ற தீர்மானம் இரு கட்சிகளினதும் ஜனாதிபதித் தேர்தல் வெற்றியில் பாரிய செல்வாக்கைச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஸ்ரீ.ல.சு.கட்சியில் அடுத்த பிரதமராக சிரேஷ்ட உறுப்பினர் மைத்திரிபால சிறிசேனவின் பெயர் கட்சி முக்கியஸ்தர்களினால் முன்மொழியப்பட்டுள்ளது.
அதேபோன்று, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நியமிக்கப்படுவாரா என்ற சந்தேகமும் கட்சிக்குள் நிலவுகின்றது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியில் பிரதமர் தெரிவு செய்யப்படின் அது சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட வேண்டும் என கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அப்படி நியமிக்கப்படின் 1977 ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தன தனது ஜனாதிபதித் தேர்தலின் போது ஆர். பிரேமதாசவை பிரதமராக அறிவித்து, அவர் கழுத்தில் ஏறி வெற்றி பெற்றது போல வெற்றி பெற முடியும் எனவும் ஐ.தே.கட்சியினர் தெரிவித்துள்ளதாகவும் இன்றைய சிங்கள ஊடமொன்று தெரிவித்துள்ளது.



 
Top