GuidePedia

நல்ல உள்ளம் கொண்டவர்கள் தொடர்ந்தும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்திருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள் இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றியிருக்கின்றார்கள்.
அவ்வாறு இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டவர்களுக்கு இன்று அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் எனக்கு மக்களினால் வழங்கப்பட்டு வரும் வரவேற்பு நிகழ்வுகளின் போது இந்த விடயத்தை மக்கள் கூறுகின்றார்கள்.
முன்னாள் ஜனாதிபதியுடன் இருப்பவர்கள் நல்ல உள்ளம் கொண்டவர்கள் என குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.



 
Top