GuidePedia

தேசிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.
அதற்கு முன்னதாக அமைச்சரவையின் எஞ்சிய அமைச்சுப் பதவிகளுக்கான அமைச்சர்கள் மற்றும் ஊவா மாகாண முதலமைச்சர் ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
இதனையடுத்து நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தின்போது அமைச்சரவை அமைச்சர்களுடன் மாகாண முதலமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
தேசிய அரசாங்கத்தின் எதிர்கால செயற்திட்டங்கள் மற்றும் புதிய அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களுக்கு இன்று அமைச்சரவையின் அனுமதி பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கிழக்குத் திமோர் நாட்டிற்கு விஜயம் செய்துள்ள சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின தவிர்ந்த ஏனைய அமைச்சர்கள் அனைவரும் இன்றைய முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.





 
Top