எதிர்க்கட்சித் தலைவராக உள்ள சம்பந்தனை நீக்கிவிட்டு குமாரவெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்தே தீருவோம் என பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்த்தன மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் தொடர்பில் சபாநாயகரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவரை பெற்றுக்கொள்ளும் செயற்பாட்டில் நாம் தொடர்ந்தும் ஈடுபடுவோம். அதில் விட்டுக்கொடுப்பிற்கு
இடமில்லை. நாம் விட்டுக்கொடுக்கவும் மாட்டோம்.
நேற்று முன்தினம் சபாநாயகருக்கு நாம் இதுதொடர்பான விடயங்களை எடுத்துக்கூறியபோது எமது பக்க நியாயத்தை அவர் ஏற்றுக்கொண்டார்.
இந்த விவகாரம் தொடர்பில் அடுத்தவாரமும் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்பார்க்கின்றோம் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.