GuidePedia


தேசிய அர­சாங்­கத்தில் ஊழல், மோச­டிக்­காரர்­க­ளுக்கு அமைச்சு பத­விகள் வழங்­கப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­வது தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்சி எந்த சந்­தர்ப்­பத்­திலும் பொறுப்புக் கூறாது. மோச­டிக்­காரர்­க­ளுக்கு அமைச்சு வழங்­கி­யுள்­ள­தாகக் கூறப்­ப­டு­வ­த­ற்கும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் எந்­த­வொரு தொடர்பும் கிடை­யாது என கல்வி அமைச்­சரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஊடகப் பேச்­சா­ள­ரு­மான அகில விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.


ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் தலைவர் என்ற வகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே சுதந்­திரக் கட்­சி­யி­ன­ருக்கு அமைச்சு பத­வி­களை வழங்­கி­ய­மைக்கு பொறுப்­பு­கூ­ற­வேண்டும். ஐக்­கிய தேசியக் கட்சி தனது கொள்­கையை முன்­னெ­டுப்­பதில் உறு­தி­யாக இருக்­கின்­றது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஊழல் மோச­டிக்­காரர்­களுக்கு அமைச்சுப் பத­விகள் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக எழுந்­துள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் வின­வி­ய­போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கேச­ரிக்கு கருத்து தெரி­விக்­கையில்,

நாட்டின் இரண்டு பிர­தான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்­கத்தை நிறு­வி­யுள்­ளன. இவ்­வாறு இரண்டு கட்­சிகள் ஒன்­றி­ணை­வதும் பாரா­ளு­மன்­றத்தின் பெரும்­பான்மை உறுப்­பி­னர்கள் அங்கம் வகிக்கும் அர­சாங்கம் என்­பதும் வர­லாற்­று­பூர்­வ­மாக இதுவே முதற்­த­ட­வை­யாக இடம்­பெற்­றுள்­ளது. இத­னூ­டாக நாட்­டிற்கு புதி­ய­தொரு அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வதே எமது பிர­தான நோக்­க­மாகும்.

தேசிய அர­சாங்­கத்தின் ஊடாக நாட்டில் காணப்­படும் முக்­கிய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண்­பதே எமது பிர­தான இலக்­காகும். இதற்­க­மைய கல்வி அமைச்சர் என்ற வகையில் நாட்டின் கல்­வித்­து­றையை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக விசேட வேலைத்­திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

அத்­தோடு நாட்டின் கல்­வி­த்து­றைக்­காக புதிய கொள்­கை­யொன்­றையும் தயா­ரிக்­க­வுள்ளோம். இதற்­கான ஏற்­பா­டு­க­ளையும் நாம் முன்­னெ­டுக்­க­வுள்ளோம்.

நாட்டில் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும், ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்­து­வா­தா­கவும், மோச­டிக்­காரர்­க­ளுக்கு தரா­தரம் பாராமல் சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கவும் தேர்தல் மேடை­களில் வாக்­கு­றுதி அளித்த ஐக்­கிய தேசியக் கட்சி தற்­போது தேசிய அர­சாங்கம் என்ற பெயரில் மோச­டிக்­காரர்­க­ளுக்கு அமைச்சு பத­விகள் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக கட்சி ஆத­ர­வா­ளர்கள் மட்­டு­மன்றி முழு நாட்டு மக்­களும் பர­வ­லாக எங்கள் மீது குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்தி வரு­கின்­றனர்.

இந்த குற்­றச்­சாட்­டுக்கள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் எதி­ரா­கவே முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு தனித்து ஆட்சி அமைப்­ப­தற்­கான வாய்ப்­புகள் இருந்தும் கூட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கு அளித்த வாக்­கு­று­திக்கு துரோகம் செய்யக் கூடாது என்ற மனப்­பான்­மைக்­கா­கவும் நாட்டின் நலனை பிர­தான இலக்­காக கருத்திற் கொண்­டுமே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தேசிய அர­சாங்­கத்தை நிறு­வ­தற்கு இணங்­கி­யுள்ளார்.

தேசிய அர­சாங்­கத்தின் அமைச்­ச­ர­வைக்­கான ஐக்­கிய தேசியக் கட்­சியின் பெயர் பட்­டி­யலை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்கவே தீர்­மா­னித்தார். இருந்­த­போ­திலும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியில் அமைச்சுப் பத­வி­களை பெறு­கின்­ற­வர்கள் தொடர்­பான பட்­டி­யலை கட்சித் தலை­வரும் ஜனா­தி­ப­தி­யு­மான மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே தெரிவு செய்தார்.

இந்­நி­லையில் தேசிய அர­சாங்­கத்தில் ஊழல் மோச­டிக்­காரர்­க­ளுக்கு அமைச்சு பத­விகள் வழங்­கப்­ப­டு­வ­தாக தெரிவிக்கப்பட்டமைக்கு ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ பொறுப்புக் கூற முடியாது. இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு கூறவேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி தனது கொள்கையை முன்னெடுப்பதில் உறுதியாக உள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் மீது பழி சுமத்துவதனை எந்த சந்தர்ப்பத்திலும் எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது என்றார்.




 
Top