GuidePedia

எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் இலங்கையின் புதிய அரசியலமைப்பு அறிமுகம் செய்யப்படும் என்று நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
கொழும்பு நீதிமன்றக் கட்டிடத்தொகுதியில் அமைந்திருக்கும் நீதி அமைச்சு அலுவலகத்தில் அவர் நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் அங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் விஜேதாச, நாட்டின் தேவை, மற்றும் நிலைத்து நிற்கக் கூடிய வகையில் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் நமது அரசியலமைப்பு 19வது தடவைகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் அரசியலமைப்பு அதன் நம்பகத்தன்மையை இழந்துள்ளது. மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டுள்ளது.
ஆனால் அரசியலமைப்பின் நிலைத்திருக்கும் தன்மையைக் கொண்டே நாட்டின் சட்டதிட்டங்களை உருவாக்க வேண்டியுள்ளது. தற்போதைய அரசியலமைப்பின் ஊடாக அதனை மேற்கொள்வதில் சிக்கல்கள் தோன்றியுள்ளது.
எனவே நமது நாட்டின் தனித்தன்மையைப் பாதுகாக்கும் வகையிலும், அடிக்கடி திருத்தங்களை மேற்கொள்ளத் தேவையற்ற வகையிலும் உறுதியான புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்படும். எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.






 
Top