முஸ்லிம் கலாசார அமைச்சர் ஹலீம் அவர்களின் வேண்டுகோளை ஏற்று சவூதி அரசு நேற்று புதிதாக அறுநூறு ஹஜ் வீசாக்களை இலங்கைக்கு வழங்கியிருந்த நிலையில் ஹஜ் செல்ல புதிதாக விண்ணப்பம் செய்பவர்களுக்கு ஹஜ் முகவர்களால் விஷேட விலை சலுகை வழங்கப்படவுள்ளது.
இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ள நாளை நண்பகல் பன்னிரண்டு மணிவரையே காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
இம்முறை ஹஜ் கடமையை நிறைவேற்ற தீர்மானித்துள்ளவர்கள் நாளை நண்பகல் பன்னிரண்டு மணிக்கு முன்னர் அனுமதி பெற்ற ஹஜ் முகவர்களுடன் தொடர்புகொள்ளுமாறு முஸ்லிம் கலாசார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அல்ஹாஜ் பாஹிம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.