GuidePedia

19ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக நிறுவப்பட்டுள்ள அரசியல் அமைப்புச் சபையின் முதல் கூட்டம் இன்று நண்பகல் அளவில் நாடாளுமன்றக் கட்டட வளாகத்தில் நடைபெறவுள்ளது.
அரசியல் அமைப்புச் சபையில் பத்து உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றார்கள்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் இதில் அங்கம் வகிக்கின்றனர்.
ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும், பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக எம்.சுமந்திரனும், சிறு கட்சிகளின் பிரதிநிதியாக விஜித ஹேரத்தும் பெயரிடப்பட்டிருந்தனர் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
மொத்த பத்து உறுப்பினர்களில் ஏழு உறுப்பினர்களின் தெரிவு செய்யப்பட்டுள்னளர்.
எஞ்சியுள்ள மூன்று சிவில் உறுப்பினர்கள் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வுகளின் போது தெரிவு செய்யப்பட உள்ளனர்.
இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதி கட்சிக் கூட்டத்தின் பின்னர் பெயரிடப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சித் தலைவரின் பிரதிநிதியாக சுமந்திரன் பெயரிடப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்ட போதிலும், எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயம் இதனை உறுதி செய்யவில்லை.





 
Top