GuidePedia

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரணவிற்கு அமைச்சுப் பதவி வழங்கப்படாமைக்கு மாத்தறை மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளை புத்திக்க பத்திரண பெற்றுக்கொண்டார். கடந்த நாடாளுமன்றிலும் புத்திக்க பத்திரண அங்கம் வகித்திருந்தார்.

இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் முதல் தடவையாக போட்டியிட்டு வெற்றியீட்டிய சிலருக்கு பிரதி அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

எனினும் மாத்தறையில் கூடுதல் விருப்பு வாக்கு பெற்றுக்கொண்ட புத்திக்கவிற்கு பிரதி அமைச்சர் பதவி ஏன் வழங்கப்படவில்லை என மாத்தறை மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இன்னமும் இரண்டு அமைச்சரவை அமைச்சுப் பதவிகளும், பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சுப் பதவிகள் ஐந்தும் வழங்கப்பட உள்ளன. இதில் ஒரு அமைச்சுப் பதவி புத்திக்கவிற்கு வழங்கப்படும் என மாத்தறை மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானநந்தாவும் ஆறுமுகன் தொண்டமானும் தேசிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபாலவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் விருப்பம் வெளியிட்டுள்ளனர்

எனினும் இருவருக்கும் அமைச்சுப்பதவிகள் வழங்கப்படுமா? என்பது குறித்து ஜனாதிபதியும் பிரதம மந்திரியும் எவ்வித உறுதிப்பாடுகளையும் வழங்கவில்லை என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் தமக்கு பெருந்தோட்டத்துறை சார்ந்த அமைச்சு இல்லையேல் அமைச்சுப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் எதிர்க்கட்சியாகியுள்ள தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் எதிர்ப்பு இருக்கப்போவதில்லை என்ற அடிப்படையில் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பெரும்பாலும் அமைச்சுப் பொறுப்பு வழங்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற அனுமதியின்படி இன்னும் இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்படக்கூடிய சந்தர்ப்பம் இருப்பதால் அதில் ஒருவர் டக்ளஸாகவும் மற்றும் ஒருவர் சரத் அனுமுகமவாகவும் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.





 
Top