GuidePedia

இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நுளம்பு பெருகுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்ப்பது தொடர்பில் குறித்த காலப்பகுதிக்குள் பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சின் பொது சுகாதார பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் டொக்டர் சரம் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
நுளம்பு பரவக்கூடிய பகுதிகளை வாரத்திற்கு ஒருதடவையேனும் சுத்தம் செய்து நுளம்பினால் ஏற்படக்கூடிய நோய்களை தவிர்த்து கொள்ளுமாறும் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 19 387 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.




 
Top